இறந்தவங்களுக்காக விரலை வெட்டும் கொடூரமான கலாச்சாரம் !

3 minute read
0

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலாச்சாரங்கள் இருக்கும். அந்த கலாச்சாரங்களானது தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்படும். 

இறந்தவங்களுக்காக விரலை வெட்டும் கொடூரமான கலாச்சாரம் !

அப்படி உலகின் சில பகுதிகளில் பின்பற்றப்படும் கலாச்சாரங்களானது வித்தியாசமாக இருப்பதோடு, புருவங்களை உயர்த்தும் வகையிலும் இருக்கும். 

மேலும் என்ன தான் நாகரீகம் வளர்ந்து விட்டாலும், இன்றும் அந்த விசித்திரமான கலாச்சாரங்கள் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஒரே காதலனை பகிர்ந்து கொள்ளும் சகோதரிகள் - செம்ம இல்ல !

ஒவ்வொரு நாட்டிலும் ஏராளமான வித்தியாசமான கலாச்சாரங்களும் விசித்திரமான நடைமுறைகளும் இருக்கிறது. 

அப்படி உறவினர்கள் இறந்தால் தங்களுடைய கைவிரலை வெட்டக் கூடிய மக்களும் இருக்கிறார்கள். அவர்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

நாம் எல்லோருக்கும் வருத்தம், தூக்கம், இழப்பு அப்படி என்றால் நம்முடைய மனதுடன் நின்று விடும். 

ஆனால் டானி பழங்குடியின பெண்களுக்கு மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும் இது பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

இவர்களுடைய ஒரு வித்தியாசமான கலாச்சாரம் தான் இவர்களை இப்படி உடல் அளவில் பாதிக்கிறது. 

ஆமாம் இவர்களுடைய உறவினர்கள் யாராவது இறந்தால் குடும்பத்தில் உள்ள பெண்கள் அவர்களுடைய விரலில் பாதியை வெட்டி விடுவார்கள்.

என்ன கைவிரலை வெட்டுகிறார்களா? இப்படி ஒரு வித்தியாசம் நடைமுறை என நீங்கள் நினைக்கிறீர்களா? அது தான் உண்மை. காலம் காலமாக இது நடந்து கொண்டு வருகிறது. 

வாடகை காதலன் வேலை - இந்த வேலையாவது கொடுங்கப்பா !

இறந்தவர்களை நினைத்து, அந்த துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த மாதிரி செய்கிறார்களாம்.

இகிபாலின் என அழைக்கப்படக் கூடிய அவர்களுடைய இந்த அசாதாரண விரல் வெட்டும் நடைமுறை சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தோனேசிய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருக்கிறது.

இருந்தாலும் பழங்குடியினரின் குடும்பங்களில் உள்ள வயதான பெண்களின் கைகளில் இப்பொழுதும் அந்த அடையாளத்தை நாம் காண முடியும். 

அது மட்டுமல்லாமல் இவர்கள் இப்பொழுதும் இந்த விரல் வெட்ட கூடிய நடைமுறையை ரகசியமாக தொடர்ந்து கொண்டு வருகிறார்களாம்.

சுமார் 250,000 பேர் கொண்ட இந்த பழங்குடி மக்கள் வெஸ்டர்ன் நியூ கினியாவில் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். 

அமெரிக்க ஆய்வாளர் ரிச்சட் அர்க்போல்ட் என்பவர் 1938 ஆம் ஆண்டு இந்த பகுதியில் விமானத்தில் சென்ற பொழுது அவர்களை கண்டு பிடித்ததாக கூறி இருக்கிறார்.

இந்த நடைமுறை முதலில் எப்பொழுது தொடங்கியது என்பதும், ஆண்களுக்கு பதிலாக பெண்களின் விரல்களை மட்டும் ஏன் வெட்டி விடுகிறார்கள் என்பதற்கும் இதுவரை எந்த காரணமும் தெரியவில்லை.

விரலின் மேல் பகுதியை வெட்டுவதற்கு கல் கத்தியை பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். வெட்டுவதற்கு முன் விரலின் பாதி மூட்டு பகுதியில் கயிறு கொண்டு கட்டி விடுவார்களாம். 

நோயெதிர்ப்பு மண்டலத்தின் நிலையை உணர்த்தும் அறிகுறிகள் !

இதனால் ரத்தம் விரலின் நுனிப்பகுதிக்கு போகாமல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தசைகள் மற்றும் நரம்புகள் இறக்கின்றன.

30 நிமிடங்கள் கழித்து குடும்ப உறுப்பினர் ஒருவர் கல் கத்தி இல்லை என்றால் கோடரி போன்ற ஆயுதத்தால் விரலை வெட்டி எடுப்பார்கள். ரொம்ப கொடுமையாக செய்கிறார்கள் பாருங்கள். 

விரலை வெட்டிய பிறகு அதனால் ஏற்படும் புண்ணில் கிருமித் தொற்று வராமல் இருக்க ஒரு வகை பாரம்பரிய மூலிகை மருத்துவத்தை செய்கிறார்களாம்.

இதனால் புண் சீக்கிரம் ஆறுமாம். விரல் அகற்றப்பட்ட பிறகு வெட்டிய விரலை சடங்குகள் செய்து புதைக்கிறார்களாம். இல்லை என்றால் அந்த விரலை உலர வைத்து எரிப்பார்களாம். 

இறந்தவங்களுக்காக விரலை வெட்டும் கொடூரமான கலாச்சாரம் !

இவர்கள் இப்படி வினோதமாக செய்வதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளதாம். 

அவர்கள் ஆவியை திருப்திப்படுத்தவும், ஆவிகளின் தொந்தரவுகள் அவர்கள் குடும்பத்தில் ஏற்படாமல் இருப்பதற்கும் இதைத் தொடர்ந்து செய்து வருகிறார்களாம். பாருங்கள் எவ்வளவு கொடூரமாக இருக்கிறது.

33 வயதில் ஓய்வு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் - அதிர்ச்சியில் ரசிகர்கள் !

நல்லவேளை இப்பொழுது இதை தடை செய்திருக்கிறார்கள். இதனால் அந்த பழங்குடியின பெண்கள் இப்பொழுது தப்பித்து விட்டார்கள். 

இது போல் ஏராளமான வித்தியாசமான நடைமுறைகள் இன்னும் நம்முடைய உலகில் இருந்து கொண்டே இருக்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 16, April 2025
Privacy and cookie settings